உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்-12: பாவங்களின் தாய்

ரமலான் சிந்தனைகள்-12: பாவங்களின் தாய்

மதுபானம் அருந்துவது பாவங்கள் அனைத்திற்கும் தாயாகும். மது அருந்துபவன் தொழுகையை விட்டுவிடுவான்.ஒருமுறை மது அருந்திய ஒருவரை நபிகள் நாயகத்தின் முன் கொண்டு வந்தார்கள். நாயகம் அவர்களிடம், “இவரை அடியுங்கள்,” என்றார். மது அருந்துவோருக்கு இவ்வுலகில் மட்டுமல்ல, மறுவுலகிலும் கடும் தண்டனை கிடைக்கும் என்கிறார் நாயகம். மது அருந்திய நிலையில் ஒருவனது உயிர் பிரியுமானால், இறைவன் அவனுக்கு கவுத்தா என்னும் நதியில் இருந்து நீரைப் புகட்டுவான். ’கவுத்தா’ என்றால், விலைமாதின் மர்ம ஸ்தானத்தில் இருந்து வெளிவரும் நீர்.’மது அருந்துபவன் இறந்தால், அவனுக்கு மறுமையில், நரகவாசியின் சீழ், வியர்வை ஆகியவற்றை அல்லாஹ் அருந்தச் செய்வான்’ என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது.மதுவைக் கண்ணால் கூட பார்ப்பதில்லை என்று நோன்பு காலத்தில் உறுதியெடுங்கள்.

இன்று நோன்பு திறக்கும் நேரம் : மாலை 6:44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம் : அதிகாலை 4:15 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !