உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் கடல் மணல் சேகரிக்கும் நேர்த்திக்கடன்
ADDED :3144 days ago
திருநெல்வேலி, நெல்லை மாவட்டத்தின் கடற்கரை கிராமமான உவரியில் அமைந்துள்ள சுயம்புலிங்க சுவாமி கோவிலில் நடக்கும் வைகாசி விசாக திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நேற்று காலை முதல் நடந்த விழாவில் தென்மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு சிறப்பு தரிசனம், 2 மணிக்கு அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயிலில் பக்தர்கள் தங்களின் நோய்,நொடிகள் தீரவும், குழந்தை பேறுக்காகவும், குடும்ப பிரச்னைகளுக்காகவும் வித்தியாசமான நேர்த்திக்கடனாக, கடல் மற்றும் கடற்கரையில் உள்ள மணலை, ஓலைப்பெட்டியில் அள்ளி கடற்கரையில் குவித்தனர்.