உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமேடு முத்தாலம்மன் கோயில் விழா

பாலமேடு முத்தாலம்மன் கோயில் விழா

பாலமேடு: பாலமேட்டில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்தவாரம் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டினர். மூன்று நாட்கள் நடந்த விழாவில் இரவு கரகம் ஜோடித்து கோயில் சேர்த்து அம்மன் கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து அதிகாலை சிறப்பு பூஜைகள், அலங்காரம் முடிந்து சக்தி கெடா வெட்டினர். விரதமிருந்த பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு எடுத்தல் உட்பட நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை (ஜூன் 8ல்) இரவு ஊர் எல்லையில் உள்ள ஊரணியில் முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை உறவின் முறை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !