குமரன் மலைக் கோவிலில் வைகாசி விசாக விழா
ADDED :3144 days ago
பெருந்துறை : பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில், கனக கிரி குமரன் மலை, வேலாயுத சுவாமி கோவிலில், நேற்று, வைகாசி விசாகத் திருவிழா நடந்தது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு, படி பூஜை, 108 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர், கிரிவலப் பாதையில் தேரோட்டம் நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, வடம் பிடித்து தேர் இழுத்தனர். விழா நிறைவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.