ஸ்ரீவில்லிபுத்தூர் திருவேங்கடமுடையான் கோயிலில் வசந்த உற்சவ விழா
ADDED :3080 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் திருவேங்கடமுடையான் கோயிலில் கோடை வசந்த உற்சவம் விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஆண்டாள், ரெங்கமன்னார் சேர்த்தியில்
திருமேனி முழுவதும் சந்தனம் சாத்தி , மல்லிகை சட்டையணிந்து நேற்று மாலை 6 :00 மணிக்கு ஆண்டாள் கோயிலில் இருந்து புறப்பட்டு, மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள் வழியாக
திருவேங்கடமுடையான் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினர்.
அங்கு வேதபிரான் அனந்தராமன் பட்டர் கோதாஸ்துதி சேவித்தார். பின் திருவாராதனம், கோஷ்டி நடைபெற்றது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர்கள் ராமராஜா மற்றும் பட்டர்கள், திருக்கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர். நாளை இரவு 7:00மணிக்கு திருவேங்கடமுடையான் சன்னதி மண்டபத்தில் வசந்த உற்சவம் நிறைவு பெறுகிறது.