உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளட்டி சதுர்முக முருகன் கோயிலில் வைகாசி விசாகம்

சின்னாளட்டி சதுர்முக முருகன் கோயிலில் வைகாசி விசாகம்

சின்னாளட்டி: வைகாசி விசாகத்தை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பாலாபிஷேகம் செய்யப்பட்டு மூலவருக்கு
தங்கக்கவசத்துடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விசேஷ பூஜைகளை தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. சதுர்முக ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு காய், கனி வகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிஷேகத்துடன், மகா தீபாராதனை நடந்தது. பின்னர் நடந்த அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தோணிமலை முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடத்திலும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !