கச்சிராயபாளையம் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம்
ADDED :3299 days ago
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் வரதராஜ பெருமாள் கோவிலில் தேரோட்டம் நேற்று நடந்தது. கச்சிராபாளையத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த 25 ஆண்டுகளுக்கு
பிறகு, பிரம்மோற்சவ விழா நடந்தது. கடந்த 30ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.நேற்று முன்தினம், திருக்கல்யாண நிகழ்ச்சியும், நேற்று திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும்
நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.