உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

கடலூர்: பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. கோவிலில், வைகாசிப் பெருவிழா கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாளான நேற்று தேர் திருவிழா விமர்சையாக நடந்தது. காலை 7:30 மணி முதல் திருத்தேர் ராஜ வீதியில் வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு 7:00 மணிக்கு தேரிலிருந்து இறங்கி தேரடியில் மண்டகப்படி பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து 8:30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருக்கோவில் வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !