நல்லாண்பிள்ளைபெற்றாள் கோவிலில் கருடசேவை
ADDED :3074 days ago
செஞ்சி: நல்லாண்பிள்ளைபெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் கருட சேவை விழா நடந்தது. செஞ்சி தாலுகா, நல்லாண் பிள்ளை பெற்றாள் திருவேங்கடமுடையான் கோவிலில் வைணவ மகாசபை சார்பில், 11ம் ஆண்டு கருடசேவை விழா நடந்தது. இதை முன்னிட்டு 7ம் தேதி காலை, ஸ்ரீபூதேவி, ஸ்ரீதேவி சமேத திருவேங்கடமுடையானுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து மலர் அலங்கரமும், கருட வாகனத்தில் திருவேங்கடமுடையான் திருவீதி உலாவும் நடந்தது. இதில் நாலாயிர திவ்யபிரபந்த பஜனைக் குழுவினர் பாசுரங்களை பாடி வந்தனர். நிகழ்ச்சிக்கு பெருமாள் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் அஞ்சுகம் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். விழா ஏற்பாடுகளை வைணவ மகாசபை பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.