உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா

ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக விழா

ராசிபுரம்: சிங்களாந்தபுரம், ராஜகணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. ராசிபுரம் அடுத்த, சிங்களாந்தபுரத்தில் ராஜகணபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை, 6:00 மணியளவில் இரண்டாம் கால யாக பூஜை, 7:30 மணிக்கு, ராஜகணபதி சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரானது, வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்தில் தெளிக்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !