உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தேர்த் திருவிழா

கோட்டை அழகிரிநாதர் கோவிலில் தேர்த் திருவிழா

சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், தேர்த் திருவிழா மற்றும் பிரமோற்சவ விழா, கடந்த மாதம், 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நேற்று தேர்த் திருவிழா நடந்தது. முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, அதிகாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு, சிறப்பு ஆராதனை காட்டப்பட்டது. பின், சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை, 9:00 மணிக்கு, ராஜகணபதி கோவில் முன் தொடங்கிய தேர்த் திருவிழா, பட்டைக்கோவில், முதல் அக்ரஹாரம் வழியாக, மீண்டும் ராஜகணபதி கோவிலை வந்தடைந்தது. இதில், வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !