வானரமுட்டி சவுடாம்பிகை கோயிலில் பக்தர்கள் கத்தி போடும் நேர்த்திகடன்
ADDED :3064 days ago
துாத்துக்குடி: கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவில் பக்தர்கள் உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி அருகேயுள்ளது வானரமுட்டி கிராமத்தில் ராமலிங்க சவுடாம்பிகா அம்மன் கோவில் உள்ளது. அங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி திருவிழாவில் பக்தர்கள் உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. அசுரர்களை அழித்த சவுடாம்பிகை அம்மனை சாந்தப்படுத்துவதற்காக பக்தர்கள் தங்கள் உடலில் கத்தி போடுவது வழக்கம். நேற்று நடந்த நிகழ்வில் ஆண்கள் தங்களது உடலில் கத்தி போட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.