உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்- 14: நேர்மையைக் கடைபிடியுங்கள்

ரமலான் சிந்தனைகள்- 14: நேர்மையைக் கடைபிடியுங்கள்

ஒருமுறை நபிகள் நாயகம், மதீனாவுக்கு வெளியே கூடாரம் கட்டி தங்கியிருந்த வியாபாரிகளிடம் சென்றார். அங்கிருந்த சிவப்பு நிற ஒட்டகம் நாயகத்துக்குப் பிடித்து விட்டது. விலை கேட்டார். அவர்கள் விலையைச்சொன்னதும், அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.“பணம் தராமல் செல்கிறாரே! இவர் யார்,” என்று சிக்கொண்டிருந்த போது, வியாபாரிகளுடன் வந்த ஒரு பெண்மணி,“கவலையை விடுங்கள்! அந்த முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா? இப்படிப்பட்ட ஒருவரை இதற்கு முன் நாம் பார்த்ததே இல்லை.இத்தகைய களங்கமற்ற முகத்தை உடையவர் நம்மை ஏமாற்ற மாட்டார். பணமோ அல்லது ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பொருளோநிச்சயம் வந்து விடும்,” என்றாள். அன்று மாலையே, அந்த ஒட்டகத்தின் விலைக்கு ஈடான பேரீச்சம் பழங்களையும், பிற உணவு வகைகளையும் நாயகம் அனுப்பி வைத்தார். நேர்மையே பெருமை தரும் என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.

இன்று நோன்பு திறக்கும் நேரம் : மாலை 6:44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம் : அதிகாலை 4:15 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !