உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் விழா

பழநி கோயிலில் திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் விழா

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும் விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ரிஷபவாகனத்தில் சிவன் பார்வதியும், திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்திகள் கோயிலை வலம்வந்தனர். அதன்பின் சிவன், பார்வதி, திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் தீபாராதணை நடந்தது. அம்பாள் இடமிருந்து பொற்கிண்ணத்தில் ஞானப்பால் பெறப்பட்டு திருஞானசம்பந்தருக்கு பாலூட்டும்ம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஞானப்பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !