ஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா: ஜூலை 27ல் தேரோட்டம்
ADDED :3050 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழா, ஜூலை 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கி, 27 ல் தேரோட்டம் நடக்கவுள்ளது. ஆண்டுதோறும் ஆடியில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத்திருவிழா சிறப்பாக நடக்கும். இதில் ஐந்து கருட சேவை, சயனத்திருக்கோலம் போன்ற நிகழ்ச்சிகளுடன் தேரோட்டமும் முக்கியமானதாக இருக்கும். இந்த ஆண்டு வரும் ஜூலை 19ல் கொடியேற்றம், 27ல் ஆண்டாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக தேருக்கு நாள் செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை 6 மணிக்கு நடந்தது. கோவிந்தராஜ் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தார். தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.