உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் சிதைந்து கிடக்கும் சுற்றுச்சுவர்கள்

பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் சிதைந்து கிடக்கும் சுற்றுச்சுவர்கள்

பொன்னேரி: அகத்தீஸ்வரர் கோவில் வெளிப்பிரகார சுற்றுச்சுவர் சிதைந்து கிடப்பதால், ஆடு மாடுகள் உள்ளே நுழைவதுடன், பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது. பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவிலுக்கு இரண்டு சுற்றுச்சுவர்களுடன் பிரகாரங்கள் அமைந்து உள்ளது. இதில், பிரதான சுற்றுச்சுவருக்கும் இரண்டாவது சுற்றுச்சுவருக்கும் இடையில் உள்ள பகுதியில், அகத்தீஸ்வரர் வீதிஉலா செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கட்டடங்கள், விநாயகர் கோவில், அன்னதானகூடம் ஆகியவை உள்ளன. இந்த கோவிலின் சுற்றுச்சுவர், இரண்டு அடி அகலத்தில், 15 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. கடந்த , 2015ல், க�ோ விலையொட்டி, அமை ந்து உள்ள ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, கோவிலின் இடதுபுறம் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் ஆங்காங்கே ஓட்டைகளும் சுற்றுச்சுவர் சிதைந்து கிடக்கிறது. அதேபோன்று கோவிலுக்கு வலது புறத்திலும், 50 மீட்டர் தொலைவிற்கு சுற்றுச்சுவர் இன்றி கிடக்கிறது. கோவிலின் சுற்றுச்சுவர் விழுந்து கிடப்பதால், ஆடு, மாடுகள் எளிதாக உள்ளே நுழைகின்றன. வெளிநபர்களின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. இதனால் கோவிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கோவிலின் சுற்றுச்சுவர்களை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !