உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஓசூர் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஓசூர்: ஓசூர் ஏரித்தெரு சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் ஏரித்தெருவில் உள்ள சாய்பாபா கோவிலில், 15ம் ஆண்டு கும்பாபி?ஷக விழா, நேற்று முன்தினம் துவங்கியது. அன்று மாலை, 4:30 மணிக்கு, காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் சுப்பிரமணி குழுவினர் சார்பில், நாதஸ்வர கச்சேரி, மாலை, 6:00 மணிக்கு தூப் ஆரத்தி, 6:30 மணிக்கு கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, வாஸ்து, சுதர்சன பூஜை, தன்வந்திரி பூஜை, லட்சுமி குபேர பூஜை, சரஸ்வதி பூஜை, இரவு, 9:00 மணிக்கு பக்தி பாடல்கள், ஷேஜ் ஆரத்தி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு காகட ஆரத்தி, 6:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, சாயி பஜன் விஸ்ணுசகஸ்ர நாமார்ச்சனை மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. பகல், 12:30 மணிக்கு சுவாமிக்கு ஆரத்தி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சந்தியா ஆரத்தி, இரவு, 7:00 மணிக்கு பக்தி பாடல்கள், இரவு, 9:30 மணிக்கு ?ஷஜ் ஆரத்தி நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !