உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முனியப்பன் கோவில் திருவிழா கோலாகலம்

முனியப்பன் கோவில் திருவிழா கோலாகலம்

மல்லசமுத்திரம்: மோர்பாளையம், கொன்னங்காடு முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடந்தது. மல்லசமுத்திரம் அடுத்த, மோர்பாளையம் கொன்னங்காடு முனியப்பன் கோவில் திருவிழா, திருச்செங்கோடு, அர்த்தனாரீஸ்வரர் வைகாசி தேர்த் திருவிழாவின் இறுதிநாளில் நடப்பது வழக்கம். நேற்று நடந்த திருவிழாவில், காலை, 7:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, பொங்கல் வைத்தல் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சிறுவர், பெரியவர், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள், இரவு, 10:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. ஏற்பாடுகளை, ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !