முக்குளத்தீஸ்வரர் கோவிலில் கூட்டு பிரார்த்தனை
ADDED :3039 days ago
திருவள்ளூர்: மேல்நல்லாத்துார் முக்குளத்தீஸ்வரர் கோவிலில், 1,008 செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு, கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த, மேல்நல்லாத்துார், முக்குளத்தீஸ்வரி சமேத முக்குளத்தீஸ்வரர் கோவிலில், கூட்டு வழிபாடு நடந்தது. இதில், அன்று செந்தாமரை வழிபாடு, மாலை 5:00 மணி முதல், இரவு 6:30 மணி வரை முக்குளத்தீஸ்வரர் அடியார்களும் மணவாள நகர் நால்வர் திருமடத்தை சேர்ந்தவர்களும் கூட்டு பிரார்த்தனை நடத்தினர். தேவாரம் திருவாசகம் ஓதியும், 1,008 தமிழ் வேத திருமுறை போற்றியும், உலக நலனுக்காக 1,008 செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.