உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3).. வீடு வாங்க யோகம்

கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3).. வீடு வாங்க யோகம்

குடும்பத்தினர் மீது பாசம் மிக்க கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம்  சுக்கிரன் 3-ம் இடத்தில் இருப்பது மிகவும் உயர்வான நிலை. புதன் ஜூன் 28- க்கு பிறகு நற்பலனை வாரி வழங்குவார். செவ்வாய் ஜூலை 12-க்கு பிறகு சுப பலனைக் கொடுப்பார். சமூகத்தில் செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம்  அதிகரிக்கும். குடும்பத் தேவை குறைவின்றி பூர்த்தியாகும். ஆடம்பர வசதி கிடைக்கப் பெறுவீர்கள். எல்லா வகையிலும் சிறப்பான மாதமாக அமையும்.

குடும்ப வாழ்வில் இனிமை உண்டாகும்.  அடிக்கடி விருந்து, விழா என சென்று வர வாய்ப்புண்டு. சுப விஷயத்தில் எதிர்பார்த்த நல்ல முடிவு கிடைக்கும்.  புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும்.  புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை அளிக்கும். கல்வி, வேலைவாய்ப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர். வீடு, வாகன வகையில் நவீன மாற்றம் செய்வீர்கள்.  புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்கவும் யோகம் உண்டாகும்.  ஜூன் 15, 16, ஜூலை 12, 13, 16- ல்  நன்மை அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் முயற்சியின்றி கிடைக்கும். ஜூன் 20,21- ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். ஜூலை 8, 9- ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூன் 22, 23- ல் அவர்கள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு. செவ்வாயால் உடல்நிலை லேசாக பாதிக்கப்படலாம். அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாக நேரிடலாம்.

தொழில், வியாபாரத்தில் லாபம்  சிறப்பாக இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு துணை நிற்கும்.  புதிய தொழில் தொடங்குவோருக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.  ஜூன் 28- க்கு பிறகு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவோருக்கு அனுகூலமான காலகட்டமாக அமையும்.  ஜூன் 17, 18, 19 ஜூலை 10, 11, 15, 16- ல் சந்திரனால் சிறு தடைகள் குறுக்கிடலாம்.  ஜூன் 26, 27-ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கப் பெறுவர். பணியாளர்கள் சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுவர்.  பணி விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். ஜூன் 28-க்கு பிறகு சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.  இடமாற்ற பீதி மறையும். சிலருக்கு பதவி உயர்வு  கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஜூலை 12-க்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். ஜூலை 5,6,7-ல் சிறப்பான பலனைக் காணலாம். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும்.

கலைஞர்கள் புதிய  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருமானம் காண்பர்.  ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் ஜூலை 12- க்கு பிறகு நற்பலன் காணலாம்.  எதிர்பார்த்த பதவி கிடைக்க யோகமுண்டு. மக்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும். அரசியல்ரீதியான பயணங்கள் வெற்றி பெறும்.

மாணவர்களுக்கு ஜூன் 28-க்கு பிறகு விரும்பிய கல்வி நிறுவனத்தில் சேரும் வாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். விவசாயிகளுக்கு பயறு வகைகள், நெல், கேழ்வரகு, கரும்பு பனைத்தொழில், பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும்.  கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் பெருகும். ஜூலை 12-க்கு பிறகு  புதிய சொத்து வாங்கும் எண்ணம்  கைகூடும். வழக்கு,  விவகாரத்தில்  சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

பெண்கள்  குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ஜூன் 28- க்கு பிறகு கணவன், -மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம்  கொள்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர்.  சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் காவலர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம்  நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு  வர்த்தகம் நல்ல லாபத்தை கொடுக்கும்.

நல்ல நாள்:  ஜூன் 15, 16, 20, 21, 26, 27, 28, ஜூலை 5, 6, 7, 8, 9, 12, 13, 14
கவன நாள்:  ஜூன் 30 ஜூலை 1,2-
அதிர்ஷ்ட  எண்:- 6, 7  நிறம்: -வெள்ளை, பச்சை

பரிகாரம்
* சனியன்று நவக்கிரக சன்னதியில் எள் தீபம்
* சுவாதியன்று நரசிம்மருக்கு அர்ச்சனை
* ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் வழிபாடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !