உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

நாமக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அடுத்த மின்னாம்பள்ளி மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு விழா, இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு பால்குட ஊர்வலம், காலை, 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. நாளை காலை, 10:00 மணிக்கு,

பொங்கல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, பக்தர்கள், அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். வரும், 16 மாலை, 4:00 மணிக்கு, மஞ்சள்
நீராட்டு விழா, சத்தாவரணம், இரவு, 7:00 மணிக்கு, கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !