மல்லசமுத்திரம் கோவில் தேரில் போஸ்டர்கள் அகற்ற பக்தர்கள் வேண்டுகோள்
ADDED :3152 days ago
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு தாலுகா, வையப்பமலை மலை குன்றின் மீது, பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சார்பாக, குன்றின் அடிவாரத்தில் தேர்
நிறுத்தப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருவிழாவின்போது, மலையை சுற்றி இத்தேர் வலம் வரும். இந்நிலையில், தனியார் நிறுவன விளம்பரங்களையும், சினிமா போஸ்டர்களையும் தேரின் மீது சிலர் ஒட்டியுள்ளனர். இதனால், தேரின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வேதனைக்குள்ளாகின்றனர். எனவே, போஸ்டர்களை அகற்ற, கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.