உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிபாளையம் கோவில்களில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

பள்ளிபாளையம் கோவில்களில் கேமரா பொருத்தும் பணி தீவிரம்

பள்ளிபாளையம்: உண்டியல் மற்றும் சிலை திருட்டை தடுக்க, பள்ளிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்பட, பல கோவில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது.
பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளாக, இரவு நேரத்தில் கோவில்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் செல்லும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. எனவே, அறநிலையத்துறைக்கு சொந்தமான
கோவில்களில், திருட்டுகளை தடுப்பதற்கும், பக்தர்களின் பாதுகாப்பிற்கும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளிபாளையம் கண்ணனூர் மாரியம்மன் கோவில் இ.ஓ., சுரேஷ்குமார் கூறுகையில், கண்ணனூர் மாரியம்மன், இறையமங்கலம் பெருமாள் கோவில்களில் கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !