திருநெல்வேலி நெல்லையப்பர் தேரோட்டத்தன்று விடுமுறை: இந்துமுன்னணி கோரிக்கை
திருநெல்வேலி: நெல்லையப்பர் தேரோட்டத்தன்று மதுக்கடையை மூடவும், மாவட்டம் முழுவதும் ஒருநாள்அரசு விடுப்பு அறிவிக்க வலியுறுத்தியும் இந்துமுன்னணியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய விழாவான
நெல்லையப்பர் தேரோட்டம் வரும்29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
தற்போதுஅன்றைய தினத்தில் சிட்டி பகுதியில் மட்டுமே விடுமுறைவிடப்படுகிறது. அந்த விழா மாவட்டம் முழுமைக்குமான விழாவாகும். எனவே அன்றைய தினத்தை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனவும், நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் முன்பாக மாடத்தெருவில் அமைந்துள்ள டாஸ்மாக்
மதுபான கடை, குறுக்குத்துறை மதுபான கடைகளை தேரோட்டத்தினத்தன்று விடுமுறை அறிவிக்கவும் வலியுறுத்தி நெல்லை மாநகர இந்துமுன்னணியினர்நெல்லை கலெக்டர் சந்தீப்
நந்தூரியிடம் மனு கொடுத்தனர்.