உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையார்பட்டியில் நாளை மண்டலாபிஷேக பூஜை நிறைவு

பிள்ளையார்பட்டியில் நாளை மண்டலாபிஷேக பூஜை நிறைவு

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டலாபிேஷக பூஜைகள்  நாளை நிறைவு பெறுகிறது. நகரத்தார் கோயிலான பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் திருப்பணி நடந்து கடந்த  மே 1ல் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினசரி  பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினசரி காலை 10:00 மணிக்கு கணபதி ஹோமம், பகல் 12:30 மணிக்கு மூலவருக்கு அபிேஷகம் நடைபெற்று வருகிறது. ஜூன்16 ல்  48 நாட்கள் நிறைவு பெறுவதை அடுத்து நாளை மாலை 5:00 மணி அளவில் சிறப்பு ஹோமம் நடைபெறும்.ஜூன்16ல்  காலை 10:00மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்று மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். இரவில் மூஷிக வாகனத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர் திருவீதி உலாநடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !