ஆத்தூர் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
ADDED :3364 days ago
ஆத்தூர்: விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவிலில், நேற்று முன்தினம், சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. அதையொட்டி, மூலவர் வெள்ளை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விநாயகருக்கு அருகம்புல் மாலை மற்றும் வண்ண மலர்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை, பக்தர்கள் கோவிலை சுற்றி வீதி உலா வந்தனர். இதில், ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் வந்து, சுவாமியை வழிபட்டனர். அதேபோல், ராணிப்பேட்டை செல்வவிநாயகர், தாயுமானவர் தெரு விநாயகர், விநாயகபுரம் விநாயகர் ஆகிய கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.