கருப்பூர் செல்லியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :3081 days ago
கருப்பூர்: செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வெகுவிமரிசையாக நடந்தது. சேலம், கருப்பூர், கோட்டை காட்டுக்கு அருகே, பழமையான கோவில் கருவறையில் எழுந்தருளிய
செல்லியம்மனுக்கு, ஊர்மக்கள் சார்பில், புதிய கருவறை, கோபுரம், மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கும்பாபிஷேகம் முன்னிட்டு, கடந்த, 12 இரவு, கிராமந்தி பூஜை, 13ல், தீர்த்தக்குடம் எடுத்தல் நடந்தது. நேற்று காலை, 9:45 மணிக்கு, விநாயகர் மற்றும்
செல்லியம்மன் மூலஸ்தன கோபுரங்களுக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், கருப்பூர், ஓமலூர், வெள்ளாப்பட்டி, நாரணம்பாளையம் ஆகிய கிராமங்களில் இருந்து,
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசித்தனர்.