செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் மகா பெரியவா அனுஷ பூஜை
ADDED :59 days ago
உடுமலை: உடுமலை ஜி.டி.வி., லே–அவுட் செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், காஞ்சி மகா பெரியவா அனுஷ பூஜை நடந்தது. கார்த்திகை மாத அனுஷ நட்சத்திரத்தையொட்டி இப்பூஜை நடந்தது. விக்னேஸ்வர பூஜை, பீட பூஜை, காஞ்சி மகா பெரியவர் அஷ்டோத்திர அர்ச்சனை, வேதபாராயணம் உள்ளிட்ட பாராயணங்கள் நடைபெற்றது. உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.