ஏற்காடு அந்தோணியார் கோவில் தேர் பவனி கோலாகலம்
ADDED :3081 days ago
ஏற்காடு: ஏற்காடு அந்தோணியார் கோவில் தேர் பவனி கோலாகலமாக நடந்தது. ஏற்காடு, லாங்கில்பேட்டையில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழா, ஒரு வாரமாக நடந்தது. அதன் நிறைவு நாளான நேற்று முன்தினம், கோவில் தேர் பவனி நடந்தது. அதில், அந்தோணியார், மாதா, சம்மனசு ஆகியோருக்கு, தனித்தனியாக தேர் ஜோடித்து, மின்விளக்குகளால் அலங்கரித்து, கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர், போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஒண்டிக்கடை, ஜெரீனாக்காடு, முருகன் நகர், ஆர்.சி.சர்ச் ஆகிய பகுதிகள் வழியாக, கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.