செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் அர்ச்சனை
செஞ்சி: செல்லபிராட்டி லலிதாசெல்வாம்பிகை கோவிலில் கோடி அர்ச்சனை பெருவிழா நடந்தது. செஞ்சி தாலுகா செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஏகதின லலிதா சரஸ்ரநாம கோடி அர்ச்சனை பெருவிழா நடந்தது. இதை முன்னிட்டு லலிதா செல்வாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து லலிதா செல்வாம்பிகை பக்தி கவச சி.டி., வெளியீட்டு விழா நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன் தலைமை தாங்கினார்.வழக்கறிஞர் ராமச்சந்திரன், அறிவழகன் ஸ்தபதி, பாஸ்கர், சங்கரன், தொழில் அதிபர் மன்னாதிமன்னன், ராஜா, ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பசுமைத்தாயகம் தலைவர் செளமியா அன்புமணி சி.டி.,யை வெளியிட்டார்.சென்னை கீதாகெளரி சங்கர் பெற்றுக்கொண்டார். விழா ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுருநாதன், கோமதிசுந்தரம், விழா குழுவினர் ஈஸ்வரன் குருக்கள், வேணு, ஏழுமலை, ரங்கநாதன், வீரப்பன், கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.