மாகாளியம்மன் கோவிலில் மகா சண்டியாக பெருவிழா
ADDED :3079 days ago
திருப்பூர் ;அவிநாசி கவுண்டம்பாளையம், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவையொட்டி, மகா சண்டியாக பெருவிழா நேற்று நடந்தது.திருப்பூர், அங்கேரிபாளையம், அவிநாசிகவுண்டம்பாளையம், மாகாளியம்மன், விநாயகர், பட்டத்தரசியம்மன், கருப்பராயசுவாமி கோவில்கள், குதிரை வாகனம் கும்பாபிஷேகம் நடந்தது. தினமும் நடந்து வந்த கும்பாபிஷே மண்டலாபிஷேக பூஜை நிறைவு விழா, நேற்று நடந்தது. மகாளியம்மனுக்கு, சப்த சதி எனும், 700 மந்திரங்கள், 13 அத்தியாய பாராயணத்துடன், ஸ்ரீ சண்டி மகா யாகம் நடந்தது. அதன்பின், 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில், பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி,சிங்க வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.