நந்திமங்கலம் காளியம்மன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
ADDED :3078 days ago
பெண்ணாடம்: நந்திமங்கலம் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் பத்ர காளியம்மன் கோவிலில், கடந்த 4ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து மண்டல பூஜை துவங்கி, தினசரி காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 12ம் நாள் மண்டல பூஜையொட்டி, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு பால், மஞ்சள், திரவிய பொடிகளால் அபிஷேகம், 8:00 மணிக்கு தீபாராதனை, வேள்வி பூஜை, 108 சங்காபிஷேகம், 12:00 மணிக்கு பத்ர காளியம்மனுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.