உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணக்கப்பிள்ளையூர் கோவில் திருவிழா

கணக்கப்பிள்ளையூர் கோவில் திருவிழா

குளித்தலை: கணக்கப்பிள்ளையூர், பொய்யாமணி கோவில் திருவிழாக்களை முன்னிட்டு, தீர்த்தக்குடம், பால்குடம் ஊர்வலம் நடந்தது. குளித்தலை அடுத்த, திம்மம்பட்டி பஞ்சாயத்து, கணக்கப்பிள்ளையூர் காளியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து, மேளதாளத்துடன் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதேபோல், பொய்யாமணி கிராமம் காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பெட்டவாய்த்தலை கரும்பாயி அம்மன் காவிரி ஆற்றில் இருந்து, பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. இன்று மாலை, 4:00 மணியளவில் சுவாமிக்கு பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற, அக்கினி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்றவற்றை நேர்த்திக்கடனாக செலுத்த உள்ளனர். நாளை முக்கிய வீதி வழியாக, சுவாமி திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !