சிவலிங்கங்கள் மீது குரங்குகள்: பக்தர்கள் வேதனை
ADDED :3076 days ago
சேலம்: சேலம், அரியானூரில் பிரசித்தி பெற்ற, 1,008 சிவன் கோவில் உள்ளது. சிவாலயத்தில் உள்ள சிவ லிங்கங்கள் பாதுகாப்பின்றி இருப்பதால், குரங்குகள் சிவலிங்கங்கள் மீது அமர்ந்து அசிங்கப்படுத்தி வருவதால், கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வேதனையடைகின்றனர். எனவே, இதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.