உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவில் தேர் பணி 90 சதவீதம் நிறைவு

சுகவனேஸ்வரர் கோவில் தேர் பணி 90 சதவீதம் நிறைவு

சேலம்: சுகவனேஸ்வரர் கோவில் தேர் பணி செய்யும், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. சேலம், சுகவனேஸ்வரர் கோவில் திருத்தேர் சிதிலமடைந்ததால், புதிய தேர் வடிவமைக்க, இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது. அதற்காக, 45 லட்சம் ஒதுக்கி, பணி தொடங்கியது. தேருக்கு தேவையான இரும்பு சக்கரம் மற்றும் அச்சுக்கள் செய்ய, ஒன்பது லட்சம் ரூபாய் ஒதுக்கி, திருச்சியில் உள்ள பாரத மின்மிகு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. அவை, சில நாட்களுக்கு முன், சுகவனேசுவரர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது, கோவில் பின்பகுதியில், தேர் வடிவமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. குறிப்பாக, முதல், இரண்டாம், மூன்றாம் அடுக்கு அமைக்கும் பணி முடிந்துள்ளது. இறுதிக்கட்டமாக, சிம்மாசனம் அமைக்கும் பணி நடைபெறும். தற்போது, 90 சதவீத பணி நிறைவடைந்துள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !