உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்பத்தி கோவில்களில் தேர் திருவிழா

பொன்பத்தி கோவில்களில் தேர் திருவிழா

செஞ்சி : பொன்பத்தியில் நடந்த கோவில் தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர். செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி திரவுபதியம்மன், செம்பாத்தம்மன், பச்சையம்மன் கோவில்களில் தேர்திருவிழா, கடந்த 2ம் தேதி துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், இரவில் வாண வேடிக்கையுடன் சாமி வீதி உலாவும் மகாபாரத சொற்பொழிவும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலை கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 1:00 மணிக்கு கெங்கையம்மனுக்கு சாகை வார்த்தலும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு செம்பாத்தம்மன், பச்சையம்மனை தேரில் ஏற்றி வடம் பிடித்தனர். பூங்கரக ஊர்வலத்துடன் நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !