பழநிகோயில் பிரசாத ஸ்டால் உரிமம் ரூ.3.90 கோடிக்கு ஏலம்
பழநி: பழநி முருகன் மலைக்கோயில் பிரசாத ஸ்டால் நடத்தும் உரிமம் ரூ.3.90 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. பழநி மலைக்கோயிலில் லட்டு, அதிரசம், முறுக்கு, புட்டமுது, தேன் குழல், சித்ரான்னங்கள் விற்கப்படுகிறது. இதனை விற்பனை செய்ய தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் உரிமம் ஏலம் விடப்படுகிறது. அதன்படி இந்த 2017 -- 18ம் ஆண்டுக்கான டெண்டர் திறப்பு மற்றும் பொதுஏலம் நடந்தது. இதில் அதிக பட்சமாக ரூ.3 கோடியே 90 ஆயிரத்திற்கு ஏலம் கேட்ட திருச்சியை சேர்ந்த வைத்தியநாதனுக்கு பிரசாத ஸ்டால் உரிமம் வழங்கப்பட உள்ளது. இணை ஆணையர் செல்வராஜ் கூறியதாவது: கடந்த ஆண்டு பிரசாத ஸ்டால் நடத்தும் உரிமம் ரூ. 3 கோடியே 45 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்தாண்டு அதைவிட ரூ.45 லட்சம் கூடுதலாக ஏலம் விடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை ஆணையர் ஒப்புதலுக்குப்பின் ஜூலை முதல் அடுத்தாண்டு(2018) ஜூன் வரை பிரசாத ஸ்டால் நடத்த உரிமம் வழங்கப்படும், என்றார்.