திருவள்ளூர் முருகன் கோவில்களில் கிருத்திகை அபிஷேகம்
திருவள்ளூர் : திருவள்ளூரில் உள்ள முருகன் கோவில்களில், கிருத்திகையை முன்னிட்டு, முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவள்ளூர், திரிபுர சுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியருக்கு கிருத்திகைஅபிஷேகம், நேற்று காலை, 9:00 மணியளவில் நடந்தது.பின், மலர் அலங்காரத்தில் வள்ளி, தேவசேனை சமேதராக மூலவர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள சுப்ரமணியர், ஜெயா நகர், வல்லப கணபதி கோவிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத முருகன், காக்களூர், திரிபுர சுந்தரி அம்பாள் உடனுறை பாதாள லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள முருக பெருமானுக்கும், நேற்று காலை சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் நடந்தது.பின், மகா தீபாராதனை நடந்தது. இதில், திருவள்ளூர், பூங்கா நகர், காக்களூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.