உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பனையபுரம் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

பனையபுரம் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

விக்கிரவாண்டி: பனையபுரம் சத்தியாம்பிகை சமேத நேத்ரோதானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சத்தியாம்பிகை சமேத நேத்ரோதானேஸ்வரர் கோவிலில் ஆனி மாத தேய்பிறை பிரதோஷ விழா நடந்தது. இதை முன்னிட்டு வினாயகர், முருகன், நேத்ரோதானேஸ்வரர், சத்தியாம்பிகை, தட்சிணாமூர்த்தி, நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், நந்தீஸ்வரருக்கு செவ்வரளி, அருகம்புல், சம்பங்கி மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீப ஆராதனை நடந்தது. நேத்ரோதானேஸ்வரர், சத்தியாம்பிகை சுவாமிகளுக்கு சிறப்பு அர்ச்சனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை கணேசன் குருக்கள், அருண் குருக்கள் ஆகியோர் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை இந்து அறநிலைய துறை செயல் அலுவலர் முத்து லட்சுமி, உபயதாரர் சிவராமன், நிர்வாகி சுந்தரம் மற்றும் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !