சதுரகிரி உண்டியல் திறப்பு: ரூ.14 லட்சம் வசூல்
ADDED :3072 days ago
வத்திராயிருப்பு: மதுரை மாவட்டம், சதுரகிரி மலை கோயிலில் நடந்த உண்டியல் திறப்பில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.14 லட்சம் வசூலானது. இக்கோயிலில் ஒவ்வொரு பசலி ஆண்டிற்கும் 4 முறை உண்டியல் திறப்பு நடைபெறும். அதன்படி இந்த பசலி ஆண்டிற்கான 4வது திறப்பு நடந்தது. மதுரை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் இளையராஜா, தக்கார் அனிதா, ஆய்வாளர் பாரதலட்சுமி, கோயில் செயல்அலுவலர் குருஜோதி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு சேவார்த்திகளால் எண்ணிக்கை நடந்தது. சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் ரூ.12.30 லட்சம், சந்தனமகாலிங்கசுவாமி கோயிலில் ரூ.1.60 லட்சம் காணிக்கை வசூலானது. இவை அனைத்தும் மூடைகளாக கட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சுமைதுாக்கும் பணியாளர்கள் மூலம் அடிவாரம் கொண்டுவரப்பட்டது.