திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசை பூஜை
ADDED :3226 days ago
திருமலைக்கேணி, நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு பால், சந்தனம், திருநீர், இளநீர், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அருகில் உள்ள மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.