உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகாலம்மன் கோவிலில் 26ல் கும்பாபிஷேகம்

நாகாலம்மன் கோவிலில் 26ல் கும்பாபிஷேகம்

திருத்தணி : நாகாலம்மன் கோவிலின் கும்பாபிஷேகம், நாளை மறுநாள் நடைபெறுகிறது. திருத்தணி நகராட்சிக்குட்பட்ட முருகூர் ஆலமரம் அருகில், நாகாலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருப்பணிகள் முடிந்து, நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக, கோவில் வளாகத்தில், யாக சாலையில், 108 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, நாளை காலை, கணபதி ஹோமத்துடன், முதல் கால யாக பூஜைகள் துவங்குகிறது. நாளை மறுநாள் காலை, 9:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், கலச ஊர்வலம் நடைபெறுகிறது.காலை, 10:00 மணிக்கு புதிதாக அமைத்த விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.மாலையில், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும், ஆன்மிக சொற்பொழிவும் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதிவாசிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !