உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சனம்

திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு திருமஞ்சனம்

திருவள்ளூர் : திருவள்ளூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று மாலை, உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. திருவள்ளூர், சத்தியமூர்த்தி தெருவில்
அமைந்துள்ளது, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். இங்கு, அமாவாசையை ஒட்டி, உற்சவருக்கு நேற்று மாலை, 5:30 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற்று. பின், சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்று,
பெருமாளை வழிபட்டனர்.திருவள்ளூர் பூங்காநகர் சிவ - விஷ்ணு கோவிலில், நேற்று காலை 9:00 மணிக்கு, அமாவாசையை ஒட்டி, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. திரளான
பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !