விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3228 days ago
பொங்கலூர் : பொங்கலூர் அருகே, மஞ்சப்பூர் செல்வ விநாயகர் மற்றும் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழா, கணபதி ஹோமத்துடன் துவங் கியது. பின், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை, 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்பஸ்தாபனம், முதல் கால யாக பூஜை, நடந்தது. நான்கு கால யாக பூஜை நிறைவில், செல்வவிநாயகர், மாகாளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந் திரங்களை முழங்கி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத் தனர். தச தரிசனம், மகா அபிஷேகம், மலர் அலங்காரம், ஆராதனை, அன்னதானம் நடந்தது. இதில், நூற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர்.