ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் 30ம் தேதி தேரோட்டம்
ADDED :9 hours ago
ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் 30ம் தேதி தேரோட்டம் நிகழ்ச்சியை முன்னிட்டு திருத்தேரை சுத்தப்படுத்தி அலங்கரிக்கும் பணி துவங்கியுள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் ஊர்வலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவில் முக்கிய நிகழ்வான சுவாமி திருத்தேர் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் வியாழன் மாலை 6:15 மணிக்கும், மே 1, 2 தேதிகளில் தேரோட்டமும் நடைபெறும். தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு திருத்தேரை சுத்தப்படுத்தி அலங்கரிக்கும் பணியை கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.