உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  சித்திரை திருவிழா: ராமநாதபுரத்தில் மீனாட்சிஅம்மனுக்கு திருக்கல்யாணம்

 சித்திரை திருவிழா: ராமநாதபுரத்தில் மீனாட்சிஅம்மனுக்கு திருக்கல்யாணம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள மீனாட்சி சமேத சொக்கநாதர் சுவாமி கோயிலில்  சித்திரை திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் நடந்தது.  


ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த  மீனாட்சி சமேத  சொக்கநாதர் சுவாமி கோயில் மிகவும் பழைமையானது. இவ்வாண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.,19 ல்  கொடியேற்றம் நடந்தது.  முக்கிய  நிகழ்ச்சியாக  ஏப்.,26ல்   மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிேஷகம் நடந்தது.  ஏப்.,27ல்  திக் விஜயம் அம்மன் உலா நடந்தது. இன்று (  ஏப்.,28 ல்) மீனாட்சி சொக்கநாதர் சுவாமிக்கு காலை 11:00மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் அருள்பாலித்தனர்.  அன்னதானம் வழங்கப்பட்டது.  நாளை ( ஏப்.,29 ல்)  பிரதோஷ வழிபாடும்,  நாளை (ஏப்.,30 ல்) தீர்த்தவாரி, பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி திருவீதி உலாவுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.  


இதே போன்று பட்டணம்காத்தான் சேதுபதி நகரில் கலெக்டர் அலுவலக வளாகம் நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அம்மன், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. உச்சிபுளி அண்ணாமலையார் கோயில்  திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


*சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று திருக்கல்யாண உற்ஸவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மூலவர்களுக்கு நாள் தோறும் சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. திருமண பத்திரிக்கை அச்சடித்து நகர் பகுதி முழுவதும் விழாக் குழுவினர் வழங்கினர்.இன்று காலை 9:30 மணிக்கு மீனாட்சி அம்மன் மற்றும் கைலாசநாதருக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. கோயில் அர்ச்சகர் மங்கள நாண் மீனாட்சி அம்மன் கழுத்தில் பூட்டினார். பக்தர்களின் மீது அட்சதை துாவப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கைலாசநாதர் திருப்பணி கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !