புதுச்சேரி நாகாத்தம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :6 hours ago
புதுச்சேரி: நாகாத்தம்மன் கோவிலில், மீனாட்சி சுந்தரேசுவரர் மற்றும் வரதராஜப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலை, கொட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவிலில், இன்று காலை மீனாட்சி - சுந்தரேசுவரர் சுவாமிக்கு 23ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு 10ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை சாமிநாத குருக்கள் நடத்தினார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருக்கல்யாண ஏற்பாடுகளை கோவில் பொருளாளர் உதயகுமார், அறங்காவலர் குழுவினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.