பகவதி அம்மன் கோவில் குட்டி குடிக்கும் நிகழ்ச்சி
ADDED :3067 days ago
கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளைம் பகவதி அம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பெரியண்ணன் சுவாமிக்கு, காவல் குட்டி குடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, பிள்ளபாளையம் குடித்தெருவில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா முன்னிட்டு, கடந்த, 16, முதல் கரகம்பாலித்தல், படுகளம், சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், நேற்று மாலை, 5:30 மணியளவில், கோவிலில் உள்ள காவல் தெய்வம் பெரியண்ண சுவாமிக்கு, காவல் ஆட்டுக்குட்டி குடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின், பகவதி அம்மன் சுவாமி கரகத்துடன் ஊர்வலம் எடுத்து சென்று, மஞ்சள் நீராடி காவிரி ஆற்றில் கரகம் விடப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.