மாணிக்கவாசகர் குருபூஜை விழா
ADDED :3064 days ago
கீழக்கரை, உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதசுவாமி கோயிலில் சகஸ்ரலிங்கத்திற்கு அருகில் தனி சன்னதி கோயிலாக மாணிக்கவாசகர் எழுந்தருளியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் மகம் அன்று மாணிக்கவாசகரின் ஜென்ம நட்சத்திரம் தின குருபூஜை கொண்டாடப்படுகிறது. நேற்று மாணிக்கவாசகருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.விவேகானந்த மாணவர் இல்ல நிர்வாகி சிவராம் தலைமையில் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் சிவனடியார்களால் திருவாசகம் முற்றோதல் பாடப்பட்டது. அன்னதானம் நடந்தது.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் சுப்பையா செய்திருந்தனர்.