மீனாட்சிபுரத்தில் கோயில் திருவிழா
ADDED :3064 days ago
கொடைரோடு, கொழிஞ்சிபட்டி அருகே மீனாட்சிபுரத்தில், காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சுவாமி சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், கரம் பாலித்தல், சுவாமி அழைப்பு, ஊர்வலம் நடந்தது. பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முளைப்பாரி ஊர்வலம், மஞ்சள் நீராடலுடன் அம்மன் பூஞ்சோலை புறப்பாடு நடந்தது.